உணவிலே மாற்றம் உடலிலோ அற்புத மாற்றம் !!


 கோதுமை புல் பொடி எண்பது என்ன?

இது சூப்பர் ஃபுட்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது

ஐஸ்கிரீம், பிஸ்கட் போன்ற செயற்கை உணவுகளுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அருகம்புல் சாறு, கோதுமை புல் சாறுகளுக்கு கிடைப்பதில்லை. அருகம்புல் சாறு குறித்து கேள்விபட்டிருக்கும் பலருக்கும் கோதுமை புல் சாறு புதிதாகவே இருக்கும்.

கோதுமை புல் என்பது கோதுமை செடியின் இளம் புல் ஆகும்.அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் இயற்கையான மூலமாகு.இவை தரும் நன்மைகளின் பட்டியல் மிக நீளமானது

இதில் வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் செலினியம் ஆகியவை நிரம்பியுள்ளன

19 வகையான அமினோ அமிலங்களும், 92 வகையான தாதுக்களும் உள்ளன. இப்புல்லில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைச் சரி செய்ய உதவுகிறது. இது அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது நீர்ச்சத்து - 65%, புரதம் - 20%, கொழுப்பு - 3%, மாவுச்சத்து - 12%, நார்ச்சத்து - 1%, கால்சியம் - 40 மி.கி, இரும்பு - 6 மி.கி., வைட்டமின் B1 - 1.4 யூனிட், B2 - 0.54 யூனிட், நியாசின் - 2.90 யூனிட் மற்றும் வைட்டமின் A, B, C, E & K ஆகியவை உள்ளன.



பயன்கள் பற்றி சிலவற்றை பார்கலாம்

சிறந்த நச்சுநீக்கி

மோசமான உணவுகளை எடுத்துகொள்வதால் உடலில் கழிவுகளும், நச்சுதன்மையும் சேர்கின்றன. இதில் இருக்கும் குளோரோஃபில் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றுவதுடன் சிறந்த நச்சுநீக்கியாகவும் செயல்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாடுக்கு கோதுமை புல் சாறு பயன்படுகிறது. நாள்தோறும் பருகிவந்தால், உடலில் தேங்கும் கழிவுகள் குறிப்பிட்ட காலத்தில் வெளியேறி, புதிய உற்சாகத்துடன் நீங்கள் இருப்பதை உணர்வீர்கள்



சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தருகிறது

இரத்த அழுத்தம் குறைத்து சீராக வைத்துக் கொள்ள உதவும்

சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் பயனளிக்கிறது இரத்தத்தில் குளுக்கோசின் அளவை சீராக வைத்துக் கொள்ள மிக உதவும்.

சருமம் தோல் சார்ந்த பாதிப்பு எதுவும் இல்லாமல் செய்து மேனி அழகு அதிகப்படுத்தும்.

சிறுநீரக செயல்பாடுகள் சீராக நடை பெறும்

மூல நோய் குணமாகும், மலச்சிக்கலை போக்கும்

இது ஒரு மூலிகை அல்ல ,உணவு! ஆனால் நோய்களை தடுக்க, குணப்படுத்தும் ஆற்றல் இதற்க்கு உண்டு.







Comments

Popular posts from this blog

கௌரி சங்கர் ருத்ராட்சம் பற்றிய விளக்கம்

கருங்காலி மரத்தின் மகிமை

கண்டிடாத ருத்ராட்ச ரூபங்கள்